கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சிறை வாழ்க்கையினை கழிக்கும் வகையில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஹூசாங்கனாபாத் மாவட்டத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.25 கோடியில் சிறைச்சாலை காலனியை போக்குவரத்துறை அமைச்சர் ஜெகதீஷ் தேவ்டா திறந்து வைத்தார். இதில் 25 குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன.
முதல்கட்டமாக போபால், சாத்னா, சாகர், உஜ்ஜான், ரீவா, ஜபல்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 25 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த திறந்த வெளிசிறையில் தங்கள் குடும்பத்தினருடன் சிறை வாழ்க்கையை கழிக்க உள்ளனர். இதில் கைதிகளுக்கு மட்டுமின்றி அவர்களது உறவினர்களுக்கு சிறைக்குள் வேலைவாய்ப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது.
இந்தியாவில் திறந்த வெளி சிறைச்சாலையுடன், கைதிகளின் குடும்பத்தினரும் தங்க அனுமதி வழங்கப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment