ஆண்கள் பேண்ட் பாக்கெட்களில் மொபைல் போன்களை வைப்பதும் ஆண்மைக்குறைவுக்கு ஒரு காரணம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். துபையில் உள்ள லைப்வே மருத்துவமனை
நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் இதற்கு நவீன வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளனர்.
புகையிலைப் பழக்கம், மாசு நிரம்பிய சுற்றுப்புறச் சூழல் போன்றவையும் மலட்டுத்தன்மைக்கான காரணம் என டாக்டர் அசோக் அகர்வால் உரையாற்றுகையில் தெரிவித்தார். இவர் கிளிவ்லேண்ட் மருத்துவமனையின் இயக்குனராக இருக்கிறார். மொபைல் போன்களிலிருந்து வரும் மின் காந்த அலைகள் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கின்றன என இவர் தெரிவித்தார். உலகமெங்கும் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலட்டுத் தன்மையும் அதிகரித்து வருகிறது என அதிர்ச்சித் தகவலையம் அவர் கூறினார்.
உடல் அதிக பருமனாக இருப்பதும் ஆணின் விந்தணுக்கள் குறைவுக்கு காரணம் என டாக்டர் அசோக் இந்தக் கருத்தரங்கில் தெரிவித்தார். லண்டனைச் சார்ந்த டாக்டர் நபில் அஸீஸ் பேசும்போது கடந்த 60 ஆண்டுகளில் ஆண்களுக்கான மலட்டுத்தன்மை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். குழந்தையின்மைக்காக பெண்களையே குறை சொல்லும் போக்கை கைவிட்டு ஆண்களும் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என இந்தக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment