பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது.
அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.
முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான்.
இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.
ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது. கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.
ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?
அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை வந்தால் இது இவனுக்கு அது அவனுக்கு என்று தீர்ப்பு அளிப்பதில் அர்த்தம் இருக்கிறது. பங்காளிகளாக இல்லாத இருவர் ஒரு சொத்து குறித்து வழக்கு கொண்டு வந்தால் ஆக்ரமித்தவனுக்கு இரண்டு ஆகரமிக்கப்பட்டவனுக்கு ஒன்று எனத் தீர்ப்பு அளிபதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து இதை விட சிறப்பானதாக இருக்கும்.
எட்டப்பன் போன்றவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு. அது போல் சட்டத்தை மீறி அப்பட்டமாக அநீதி இழைத்த நீதிபதிகள் என்ற பெயர் இந்த நீதிபதிகளுக்கு வரலாற்றில் கிடைப்பது உறுதி.
பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் இருந்ததையும் அது அப்பட்டமாக இடிக்கப்பட்டதையும் உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உலகம் இந்தியாவின் மீதும் இந்த தீர்ப்பை வழங்கியவர்கள் மீதும் காரித்துப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
நாங்கள் நீதிம்னறத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று கூறி வந்த சங்பரிவாரம் இத்தீர்ப்புக்கு முன்னர் அமைதி காக்க வேண்டும் என்று கூறியதும், எங்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று கூறியதும் இது பேசி வைக்கப்பட்ட தீர்ப்பு என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் சட்ட விரோதமாக இருந்தாலும் அது சட்டத்தின் படி அங்கீகரிக்கப்படும். முஸ்லிம்களின் சட்டப்படியான உரிமைகளாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பாவிட்டால் அது சட்ட விரோதமானதாகக் கருதப்படும் என்ற செய்தி சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
இனிமேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நீதி மன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதி மன்றம் சென்று பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்.
இத்தீர்ப்பு மூலம் முஸ்லிம்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.
இனி மேல் நாம் ஏன் விசுவாசமாக செயல் படும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுமானால் அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த நீதிபதிகளே பொறுப்பாவார்கள்.
நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் எப்போதே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையும் இது போல் காவித் தீர்ப்பு தான் வரும் என்பதையும் சென்ற மாதம் உணர்வு தலையங்கத்தில் நான் சுட்டிக் காட்டினேன்.
அது தான் இப்போது நடந்துள்ளது
No comments:
Post a Comment