அஸ்ஸலாமு அலைக்கும்....
திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை:
போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர்.
இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவிஹித் ஜமாத்தாருக்கும் இடையே தொழுகை முறையில் பிரச்சனைஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதனால் பொது இடத்தில் தனியாக தொழுகை நடத்துவதற்கு தவிஹித் ஜமாத்தார் ஏற்பாடு செய்துவந்தனர்.
இது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், தவிஹித் ஜமாத்தார் நிர்வாகிகளிடம் கேட்டபோது மீண்டும் மோதல் வரும் சூழல் ஏற்பட்டது.
இதனால் நேற்று தவிஹித் ஜமாத் பிரமுகர்கள்,கிராம ஜமாத்தாரை நேரில் சந்தித்து விவாதித்தபோது விவாதம் முற்றி கைகளப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கைகளப்பு இரவு வரை நீடித்துள்ளது. தொடர்ந்து தவிஹித் ஜமாத்தாருக்கு ஆதரவாக வந்த திருமங்களக்குடி ஹச்முகமது, பிரச்சனை பெரிதானதும் தனது இரு கைத்துப்பாக்கியை எடுத்து எதிரில் நின்ற கிராம ஜமாத்தார் மீது 12 முறை சுட்டிருக்கிறார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கிராம ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் பலியானார்கள்.
5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் இருதரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
மக்களே கவனியுங்கள். ரமலானில்... பிரிவினையை வழுப்படுத்தி, பகிரங்கமான வழிகேட்டில் ஆகிவிடாதீர்கள்..
இது ஏதோ ஆத்திரத்தில் செய்த செயல் இல்லை. 12 ரவுண்ட் சுட்டு கொலைகள் செய்யும் அளவிற்கு, அவர்களுக்கு என்ன கேடு நேர்ந்துவிட்டது..???
இது சதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது..அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி,பிரச்சனையை சுமுகமாக்க வரவில்லை.கொடூர ஆயுதங்களை கையில் ஏந்தி வருபவன்,பிரச்சனையை பெரிதாக்கி,பிரிவினையை உண்டாக்கவே வந்துள்ளான்,,
என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி...தவறு எங்கு நடந்திருந்தாலும் சரி.கொலை புரியும் பாதகர்களின் கூட்டத்தார் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
என் சமுதாய மக்களை பிழவு படுத்தி,அதில் குளிர்காய முயலும் அந்த கயவர்கள்,எந்த ஜமாத்(மண்ணாங்கட்டி)ஐ சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் அழிந்து போகட்டும்.
இப்படிப்பட்ட நிலையை உருவாக்கி,எம்மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ஈனர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும்....
இதற்கு எந்த விளக்கமும் தர முடியாது.எந்த காரணங்களும் தந்து சமாலிக்க முடியாது.அண்ணணின் பிடியை நம்பி ஆற்றில் இறங்கிய தம்பிகளே..உங்களை பற்றிப்பிடிக்க சொன்னது அண்ணனின் கயிற்றை அல்ல.அல்லாஹ்வின் கயிற்றை.அதுவே சரியானது.இப்படிப்பட்ட அண்ணன்களின் கயிறு நம்மில் ஒருவருக்கு தூக்கு
கயிறாகவும்,மற்றவனுக்கு,துப்பாக்கி தோட்டாவாகவுமே மாறும்... நமது எதிரிகளின் வேலையை நாம் எவ்வளவு சுலபமாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்று...
இப்படி பட்ட ஒரு சூழலில்,நாளை நமது எதிரியே,இதே ஊரில் நம்மை கருவருக்க முற்படும்போது.ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியாது அழிந்து ஒழிய நல்ல தருணம் அமைந்து விட்டது.இப்படிப்பட்ட கையறு நிலைக்கு நம்மை தள்ளியது எது என சிந்தியுங்கள்....
தமிழில் உள்ள ஒரு பழமொழி நமக்கு சரியாக பொருந்தும்..
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமை இல்லையேல் நம் அனைவருக்கும் தாழ்வு" நம்மை பொருத்தவரை அழிவு நிச்சயமாகிவிடுகிறது...சகோதரர்களே சிந்தியுங்கள்...
ஜமாத் அது இதுன்னு பேசி, நமக்கு நாமே, வாகாக குழி வெட்டிக்கொண்டு இருக்கிறோம் சகோதரர்களே...
இந்த நிலை நீடித்தால்,முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் இருந்து துடைத்து எறியப்படும் நாள் வெகுவிரைவில் இல்லை.நமக்கு எதிரி வெளியில் இல்லை...நம்முடனே உள்ளான்.பகுத்து விளங்கிக் கொள்ளுங்கள்,,,,,
வல்ல அல்லாஹ்,யாவற்றையும் நன்கறிந்தவன்.தீர்க்கமான அறிவுடையவன்....நம் அனைவருக்கும் சிந்தித்து விளங்கும் ஆற்றலை தர போதுமானவன்.
இயக்க பேதம் மறப்போம்,இனிய உறவு வளர்ப்போம்....
நக்கீரன் செய்தி:
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment