இஸ்லாமிய எதிர்பிரச்சாரம் செய்யும் தினமலர் போன்ற பத்திரிகைக்கு இந்த செய்தியை மேற்கோள் காட்டி கடிதம் அல்லது மின்னஞ்சல் தயவு செய்து நமது ஒற்றுமையான எதிர்ப்பை காட்டுங்கள். இஸ்லாமிய/முஸ்லிம் தீவிரவாதம் என்று தலைப்பில் வரும் செய்தியை தவிர்க்க சிறு முயற்சி செய்வோம்.
உள்துறை அமைச்சர் கூறிய காவி பயங்கரவாதம் பற்றி கருத்து வெளiயிட்ட கட்காரி மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம் அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல கருத்தை கூறி உள்ளார் இனிகாவி போர்வையில் பத்திரிகை நடத்தும் கூட்டத்தினருக்கும் அறிவுரை கூறினால் நன்றாக இருக்கும்.
முஸ்லிம் ஒருவர் தவறு செய்தால் அதை அவர் சார்ந்த மதத்தை, இனத்தை குற்றபரம்பரையாக சித்தரிக்கும் கொடுமை தான் இந்த காவி மற்றும் பாசிச சக்திகள் செய்து வருகிறது அப்போது யாரும் வாய் திறக்கவில்லை. இன்று தனக்கு என்று வரும் போது மதத்தை வைத்து பேச வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
முஸ்லீம் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று இதுவரை அவதூறு பரப்பிவர்கள் இன்று மதத்தின் பெயரில் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம் திருவாய் மொழிந்துள்ளார்கள்.
நல்ல கருத்தை யார் கூறினாலும் வரவேற்போம், தினமலர் போன்ற இஸ்லாமிய எதிர் பிரச்சார செய்யும் பத்திரிகை இனிவரும் காலத்தில் குற்றம் செய்தவர் பற்றி செய்தி வெளiயிட வேண்டும். அதை விடுத்து குற்றம் சாட்டப்பட்டவரின் இனம்,மதத்தின் பெயரை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அனைவர்களும் இந்த செய்தியை மேற்கோள்காட்டி தினமலர் பத்திரிகை ஆசிரியருக்கு தனிகடிதம் அல்லது மின்னஞ்சல் செய்து இனிவரும் காலத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று தலைப்பிடுவதை தடுக்க முயற்சி செய்யலாம்.
தயவு செய்து இதை செய்தால் தினமலர் ஆசிரியர் குழுமத்திற்கு அறிவு வர வாய்ப்புள்ளது.
இரண்டு வரி தினமலருக்கு எழுதினால் நிச்சயம் அல்லாஹ்வின் துணை கொண்டு பலன் வரலாம்.
தினமலர் மற்றும் இதுபோன்ற பத்திரிகைக்கு இந்த செய்தியை மேற்கொள் காட்டி விட்டு இந்த இழையில் நீங்கள் கடிதம் அல்லது மின்னஞ்சல் செய்து விட்டீர்கள் என்று சான்று பதிவு செய்யுங்கள்.
ஒற்றுமையாக செயல்பட்டால் பல நன்மை நமக்கும், சமுதாயத்திற்கும் வரும் இன்ஷா அல்லாஹ்
சமுதாய கவலையில்
நன்றி : உங்கள் சகோதரன்
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment