Latest News

செல்போனே, தள்ளிப்போ!


செல்போன் டவர்களில் இருந்து பரவும் மிங்காந்த அலைகளால், சிட்டுக் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் பதறுகிறார்கள். சிட்டு குருவிகளுக்கு மட்டுமல்ல... இதனால் பொதுமக்களுக்கும் அபாயகரமன நோய்கள் உண்டாகலாம்! என்ற இன்னோர் அணுகுண்டை வீசுகிறார்கள், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகள்!

.நா. உலக சுகாதார அமைப்பின் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சு நிறுவனம் மே 26 தொடங்கி ஜுன் 2ம் தேதி வரை எட்டு நாள் மா நாடு ஒன்றை பிரான்ஸில் நடத்தியது. 14 நாடுகளைஸ் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் புற்று நோய் தடுப்பு குறித்து அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்து விவாதங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான், செல்போன் பயன்படுத்துவதால் மூனைப் புற்று நோய் வரலாம்' என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார்கள்...


தினமும் அரை மணி நெரம் செல்போனில் பேசுகிறவர்களிடம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் அடைப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகச் சொன்ன விஞ்ஞானிகள், புற்று நோய் வரலாம் என்பது எச்சரிக்கைதானே தவிர இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக மளைப் புற்று அதிகரித்து வருவதற்கு செல்போன் உபயோகிப்பதற்கும் தொடர்பு இருக்கலாம் ...  என்று சொல்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை அப்போலோ மருத்துவமனையின் புற்று  நோய் மற்றும் கதிரியக்க சிகிசை நிபுணர் டாக்டர் அமர்நாத் குறியது வாகனப் புகை சிகரெட் புகை தொழிற்சாலை நச்சு போன்றவை போலவே, செல்போங்களில் இருந்து பரவும் மின் காந்த அலைகளும் நமது உடலில் நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும். அது மூளைப் புற்றாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இன்னும் ஆய்வுகள் முழுமையடையவில்லை. அநேகமாக ஜூலை மாதத்தில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகலாம்.

கதிரியக்கத்தின் அளவுக்கு இல்லை என்றாலும்கூட், மின் காந்த அலைகள் நமது உடலின் மரபணுக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறிப்பாக மின்காந்த அலைகளானது, நமது மூளையில் உள்ள மரபு அணுக்களைத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல் தொடந்து கொண்டே  இருந்தால்...மூளைப் புற்று கட்டாயம் வந்துவிடும். செல்போனை அதிகநேரம் காதில் வைத்துப் பேசுவதால் காது  நரம்புகளிலும் ஒரு வகையான கட்டி உருவாகலாம். இது சாதாரணக் கட்டியாகவும் இருக்கலாம்... கேன்சராக மாறவும் வாய்ப்பு உண்டு.

செல்போங்களை அதிகம் பயன்படுத்தும் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவு பாதிக்காது என்றாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே பிறந்தாலும் ஊனமாக இருக்க வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு கருச்சிதைவு வாய்ப்பும் உண்டு "' என்று அதிர வைத்தார்.

அவரே தொடர்ந்து அமெரிக்கா, நியூஸிலாந்து, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு பொருளால் பாதிப்பு ஏற்படுவது உறுதியாகத் தெரிந்தால்,      

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.