அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் மக்கள்; சென்னை காவல் ஆணையர் வேதனை!
முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேதனை தெரிவித்துள்ளார். விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுவது வெட்கக் கேடானது; கி.வீரமணி :
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது என்றும், இரும்புக்கரம் கொண்டு சட்டம் இதனை ஒடுக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று :
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி நோய் பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், நேற்று 31,253 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரையில், 22,92,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் :
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், வரும் 21-ம்ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Live Updates
8:51 (IST) 10 Jun 2021
அதிமுக என் உயிர் போன்றது - சசிகலா
அதிமுக என் உயிர் போன்றது; கட்சியை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது
என்று தொண்டரிடம் பேசிய சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
8:44 (IST) 10 Jun 2021
நீட் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - முதல்வர்
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
8:23 (IST) 10 Jun 2021
முன்கள பணியாளர்களுக்காக உணவு தயாரிக்கும் காவல்துறையினர்
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர். 20 சமையல் கலைஞர்களுடன் சப்பாத்தி, குருமா, பிரியாணி மற்றும் பச்சடி தயாரித்து வருகின்றனர் தமிழக காவல்துறையினர். சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், ராஜீவ்காந்தி, கே.எம்.சி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 3000 மருத்துவ பணியாளர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
7:48 (IST) 10 Jun 2021
தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு
தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க முதல்வருக்கு உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளன. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கினை அமல்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7:46 (IST) 10 Jun 2021
தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படலாம்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
7:14 (IST) 10 Jun 2021
14,420 தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது.
7:13 (IST) 10 Jun 2021
மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு பதிவு செய்துள்ளார். மூன்று வாரங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
7:03 (IST) 10 Jun 2021
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை
குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
6:48 (IST) 10 Jun 2021
நகை பணம் திருடிய காவல்துறையினர் 3 பேர் கைது
வேலூர் அருகே சாராயம் தாயாரிக்கப்படுகிறதா என்பதை சோதனை இட சென்ற காவல்துறையினர் மூன்று பேர் பொதுமக்கள் வைத்திருந்த பணம் மற்றும் நகையை திருடியதால் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6:43 (IST) 10 Jun 2021
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு படம்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
6:17 (IST) 10 Jun 2021
தடுப்பூசிக்கான முன்பதிவு போதாது; காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி!
தடுப்பூசிக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்வது மட்டும் போதாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மேலும், தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைத்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
6:03 (IST) 10 Jun 2021
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு க்ரீன் சிக்னல்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், டிக்டாக் உள்ளிட்ட 8 சீன செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், தற்போதைய அதிபர் பைடன் அத்தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
6:02 (IST) 10 Jun 2021
பாலியல் தொல்லை; மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகள் ஆஜர்!
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதான பாலியல் புகாரில், பள்ளி நிர்வாகிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
5:52 (IST) 10 Jun 2021
ஊரடங்கு நீட்டிப்பு; தொடங்கிய ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5:51 (IST) 10 Jun 2021
இடைத்தரகர்கள் ஒழிப்பு; 10 கோடி மிச்சம் : அமைச்சர் மா.சு!
மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதில் இருந்த இடைத்தரகர்கர்கள் ஒழிக்கப்பட்டதால், தற்போது மாதத்திற்கு 10 கோடி ரூபாய் மிச்சப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
5:43 (IST) 10 Jun 2021
நீட் தேர்வு; இன்று ஆய்வு குழு கூட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னரே, முடிவெடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
5:28 (IST) 10 Jun 2021
ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14ம் தேதி நடக்க உள்ளதாக இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
4:52 (IST) 10 Jun 2021
சென்னை வந்தடைந்த 85,000 கோவக்ஸின் தடுப்பூசிகள்!
தமிழ்நாடு அரசு ஆர்டர் செய்ததில் 85,000 டோஸ்கள் கோவாக்ஸின் தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.
4:27 (IST) 10 Jun 2021
புதிய உச்சத்தில் கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 6148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4:15 (IST) 10 Jun 2021
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 1,51,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 6148 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
3:48 (IST) 10 Jun 2021
ஊரடங்கு நீட்டிப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், வரும் 14-ம் தேதியோடு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்த சூழலில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
3:43 (IST) 10 Jun 2021
ஆம்புலன்ஸ் விபத்து; கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!
கள்ளக்குறிச்சியை அடுத்த சங்காபுரத்தில் ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதியதில், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரின் உறவினர்கள் இருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment