Latest News

விபத்தில் இறந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சமும், விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் இன்று (10.6.2021) அதிகாலை வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருமதி ஜெயலட்சுமி என்பவர் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார் அவருடன் அவரது மாமியார் திருமதி செல்வி, நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோரும் உடன் வந்த போது கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் ஏரி அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் திருமதி ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு வரும் வழியிலும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சம்பவ இடத்திலேயும் இறந்துவிட்டனர். இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் திருமதி ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாயும், அவருடன் உயிரிழந்த அவரது மாமியார் திருமதி செல்வி மற்றும் நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதோடு விபத்தில் உயிரிழந்த இம்மூவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப்பயன்களைப் பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Dailyhunt

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.