
முழு ஊரடங்கையொட்டி 2 வாரங்களுக்கு பேருந்து,கார், ஆட்டோகள் இயங்காது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதனையொட்டி, மாவட்டங்களுக்கு இடையே மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்ஸி ஆட்டோக்களுக்கும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
விமானம், ரயிலில் வெளிநாடு - வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு இ - பாஸ் முறை தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment