சென்னை: முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்வருமான பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin- Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2021மேற்குவங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பழனிசாமி. முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்து அனுப்பினார் பழனிசாமி.பழனிசாமிக்கு ஸ்டாலின் நன்றி மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க பழனிசாமி ஆலோசனையும், ஒத்துழைப்பும் அவசியம். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படுவதே உண்மையான ஜனநாயகம் இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment