
சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது.
இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு லாக் டவுன் போட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வரும் மே.10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை லாக்டவுன்- எதற்கு எல்லாம் தடை?- முழு விவரம்!
இதன்படி, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று(மே.8) மற்றும் நாளை(மே.9) காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment