
நாடு முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையில் மூன்று புதிய அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. வழக்கமாக கொரோனா என்றால் காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல், கடுமையான உடல்வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்.
அதற்குபிறகு தலைவலி, வாசனை, சுவை தெரியாது என்றும் மருத்துவர்கள் கூறினா். அதே போன்ற அறிகுறிகள் பலருக்கும் தென்பட்டது. இப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் மேலும் சில அறிகுறிகளை மருத்துர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா 2ஆவது அலையில், கண்கள் சிவப்பாக மாறுவது, கண் வீக்கம், கண்களில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறுதல், காது கேட்கும் திறன் இல்லாமல் போதுவது, வயிற்றுப் போக்கு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஆகிய அறிகுறிகளும் தென்படும் என தெரியவந்துள்ளது.

செரிமானம் தொடர்பான பிரச்னை இருந்தால், இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அது நீடித்தால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதீத சோர்வு, வழக்கத்துக்கு மாறான இருமல், கண்கள் சிவத்தல், கண்ணில் நீர் வழிதல், காது கேட்கும் திறன் குறைதல், வயிறு செரிமான பிரச்னை இருந்தால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment