
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 10.82 கோடியாக உயர்ந்துள்ளது. அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.77 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.
இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.82 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 23.77 லட்சமாகும்.
அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.04 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.79 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 4.86 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.79 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 10,880,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 155,195 பேர் பலியாகிவிட்டனர். 10,587,351 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 2.36 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சமாகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 98,983 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 9,353 பேரும் பிரேசிலில் 53 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டனில் 13,494 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ரஷ்யாவில் 40 லட்சம் பேரும், பிரிட்டனில் 39 லட்சம் பேரும், பிரான்ஸில் 34 லட்சம் பேரும், துருக்கியில் 25 லட்சம் பேரும், இத்தாலியில் 26 லட்சம் பேரும் ஸ்பெயினில் 30 லட்சம் பேரும், ஜெர்மனியில் 23 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
source: oneindia.com
No comments:
Post a Comment