
விழுப்புரம்:தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சிக்கு 8 தொகுதிகள் கேட்கப்படும் என, அக்கட்சியின் தேசியத் தலைவர்
காதர்மொய்தீன் கூறினார்.விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம்
கூறியதாவது;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிகள், வியூகங்கள்
குறித்து மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27ம் தேதி
சென்னையில் நடக்கிறது.முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு மாநாடாக அது ஒரு
நாள் முழுவதும் நடைபெறும். இறுதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்று
நிறைவுரையாற்றுகிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நாங்கள்
தொடர்கிறோம். கடந்த தேர்தலின்போது 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த முறை
எத்தனை தொகுதிகள் என இன்னும் பேசவில்லை.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., இதற்கான குழுவை
நியமித்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும். இம்முறை குறைந்தபட்சம் 8
தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
முஸ்லிம் மக்களின் கோரிக்கை ஆகும். அப்போது தான் ஒரு கட்சி தேர்தல்
ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியும். அதுவே எங்களின் விருப்பமாகும்.
கூட்டணி தலைமையிடம் கோரிக்கை வைப்போம்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சிக்கு ஏணி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தான் தேர்தலில்
போட்டியிடுவோம்.விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்கள்
மீதான வழக்குகள் ரத்து என தி.மு.க., தரப்பில் வாக்குறுதிகள் வழங்கி
வருகின்றனர். இந்நிலையில், அதே திட்டங்களை முதல்வர் அறிவிப்பது,
தி.மு.க.,வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.இவ்வாறு காதர்மொய்தீன்
கூறினார்பேட்டியின் போது, மாநில துணைத்தலைவர் ஷபிகுர்ரகுமான், மாவட்ட
தலைவர் முகமது இப்ராகிம், மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment