
பலன்பூர்: ஜராத்தில், 60 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக, மனைவியை
கொலை செய்து, விபத்து நடந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
'இன்சூரன்ஸ் பாலிசி'குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் பலன்பூரைச்
சேர்ந்தவர் லலித் தேங்க். பட்டய கணக்கரான இவரது மனைவி தக் ஷ பென் தேங்க்.
இருவரும் டிச., 26ம் தேதி, கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து
வந்தனர். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், தக்ஷ்பென் பலியானார்.
பலன்பூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்த நிலையில், தக்ஷ்பென்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது குடும்பத்தினர் கூறினர். விசாரணையை
தீவிரப்படுத்திய போலீசார், தக்ஷ்பென், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதை
கண்டறிந்தனர்.அதன் விவரம் வருமாறு: தக்ஷ்பென் இறப்பதற்கு மூன்று
மாதங்களுக்கு முன், அவரது பெயரில், 60 லட்சம் ரூபாய், 'இன்சூரன்ஸ்
பாலிசி'யை கணவர் எடுத்துள்ளார்.
விபத்து நடந்தது போல், மனைவியை கொல்ல முடிவு செய்த அவர்,
கிரிட் மாலி என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.கார் மோதல்அவர்கள்
திட்டமிட்டபடி, டிச., 26ல், மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
திரும்ப நடந்து வந்தபோது, சிறிது துார இடைவெளியில் மனைவியை
பின்தொடர்ந்துள்ளார். அப்போது கிரிட் மாலி ஓட்டிவந்த கார் மோதியதில்,
தக்ஷ்பென் கொல்லப்பட்டார். இன்சூரன்ஸ் தொகை, 60 லட்சத்திற்காக, மனைவியை
கொலை செய்த லலித் தேங்க், இரு நாட்களுக்கு முன் கைதானார். அவருக்கு உதவிய
கிரிட் மாலி உள்ளிட்ட சிலரை, போலீசார் தேடுகின்றனர்.
No comments:
Post a Comment