
சேலம்: 2021 புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.
சேலம் மாவட்டத்தில் டாப் 10 இடங்களில் இருக்கும் சம்பவங்கள் பின்வருமாறு:
1. தமிழகத்தின் மாங்கனி நகரம், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்.
சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் வடிவமைக்கப்பட்ட மைதானம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ,பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ராகுல் பந்துவீச முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மைதானத்தில் விளையாடியது அனைவரையும் கவர்ந்தது.
2. எளிமையாக நடந்த எம்எல்ஏ வீட்டு கல்யாணம் உள்ளது. பொதுவாக எம்எல்ஏக்கள் வீட்டு திருமணம் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் மிக எளிமையாக சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா நடைபெற்றது. ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா அவரது மகள் இந்துவிற்கு ஊரடங்கு காலத்தில் கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்தினார் இவரின் செயல் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு முன் மாதிரியாக இருந்தது.
ரீவைண்ட் 2020.. 79 வயதில் பஞ்சாயத்து தலைவர் முதல் மாஸ்க் பரோட்டா வரை.. மதுரை டாப் 10
3. சேலம் மாநகரில் தமிழகத்திலேயே மிக நீண்ட தூரத்திற்கு கட்டப்பட்ட ஈரடுக்கு பாலம்
சுமார் 441 கோடி ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சூட்டி சிறப்பு சேர்த்தார்.
4. சப் இன்ஸ்பெக்டர் என்னை அடித்துவிட்டார். நான் சாக போகிறேன் என்று கூறி சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியில் வசித்து வந்த சிவனடியாரான சரவணனை தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் பூஜை செய்யவிடவில்லை என்றும் அடித்து உதைத்தார் என மரண வாக்குமூலம் கொடுத்து சாமியார் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
5. 'மாணவர்களின் மனித கடவுளே..' முதல்வரை வாழ்த்தி சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரிகளில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் பல இடங்களில் விதம் விதமான வாழ்த்துகள், நன்றி தெரிவித்து போஸ்டர்களை அச்சடித்து ஒட்டினர்.
6. "மாணவர்களின் மனித கடவுளே.. எங்கள் ஓட்டு உங்களுக்கே" என்ற வாசகங்கள் செம ஹிட் அடித்தது. உயிருடன் இருக்கும் போதே கை கால்கள் கட்டப்பட்டு ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் மரணத்தை தழுவியது. சேலம் மாவட்டம் சந்தபட்டியில் வசித்து வந்த 78 வயதான பாலசுப்ரமணிய குமாரை உயிருடன் சவப்பெட்டியில் வைத்தார் .அருகில் இருந்த மக்கள் இது குறித்து புகார் அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் .சவப் பெட்டிக்குள் பாலசுப்பிரமணியம் துடிதுடித்த அந்த காட்சியே இன்னும் அகலாத நிலையில், அவரது மரணம் அனைவரையும் நிலைகுலைய வைத்தது
7. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்.கட்சி பாகுபாடின்றி முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்று தாயார் தவசாயி அம்மாளை அக்கறையுடன் கவனித்து வந்தார். அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது
8. நிதி கேட்டு கிடைக்கவிடாததால், மனம் தளரவில்லை, திமுகவை சேர்ந்த வீராணம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம். தனது சொந்தப் பணத்தில், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து சாதித்துள்ளது. ஜருகுமலை மற்றும் ஏற்காடு அடிவாரத்தில் இருந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 மீட்டர் தொலைவில் கால்வாயில் இருந்து பைப் மூலம் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை ஏரிக்கு கொண்டு வந்துள்ளார்.அவரின் முயற்சிக்கு அப்பகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
9. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை!
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. தருமபுரி தொடங்கி நாகை வரை உள்ள அனைத்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் காவிரி நீர் தான்.. காவிரி வழிந்தோடும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நடப்பாண்டில் 4வது முறையாக 100 அடியை எட்டியது
10. சேலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் இவ்வருடத்தை மகிழ்ச்சியாக முடித்து வைத்துள்ளார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்து 2019ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார். 'யார்க்கர் கிங்' என்னும் பட்டத்தைச் சொந்தமாக்கி, ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.
இந்த 10 சம்பவங்கள்தான் 2020-ஆம் ஆண்டு முழுவதும் மதுரை மாவட்ட மக்களை சுவாரஸ்யபடுத்தி வந்தது.
source: oneindia.com
No comments:
Post a Comment