வாஷிங்டன்: தேர்தல் மோசடி குற்றச்சாட்டு ஆதாரமில்லாத ஒன்று என
நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு உயரதிகாரியை டிரம்ப் பதவியிலிருந்து
அதிரடியாக நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டாலும், அந்நாட்டு நடைமுறைப் படி 2021
ஜனவரியில் தான் ஜோ பைடன் பொறுப்பேற்க முடியும். அதற்கான அதிகார மாற்றங்கள்
தற்போதே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒத்துழைப்பை வழங்க மறுத்து
தேர்தலில் பெரிய மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. நீதிமன்றங்களும் அது
தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டன. தேர்தல் பாதுகாப்பு துறையின்
உயர் அதிகாரியான கிறிஸ் கிரெப்ஸ், 2020 தேர்தல் அமெரிக்க வரலாற்றில்
மிகவும் பாதுகாப்பானது என அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் அவரை பதவியிலிருந்து
நீக்குவதாகவும், உடனடியாக இவ்வுத்தரவு நடைமுறைக்கு வருவதாகவும் டுவிட்டரில்
அறிவித்துள்ளார். "கிறிஸ் கிரெப்ஸின் சமீபத்திய அறிக்கை மிகவும் தவறானது,
தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இருந்தன." என்றும்
கூறினார். கிரெப்ஸ் இதனை எதிர்பார்த்தே இருந்தார் என்று அவரது நண்பர்கள்
கூறுகின்றனர். " சேவை செய்ததற்கான மரியாதை.
நாங்கள் சரியானதையே செய்தோம்." என்று க்ரெப்ஸும் டுவீட் செய்துள்ளார். கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநராக இருந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஹேக்கர்களின் ஊடுருவல்களை தடுப்பது இவ்வமைப்பின் பணி. கிரெப்ஸ் நீக்கப்பட்டிருப்பதற்கு டிரம்ப் கட்சியின் எம்.பி.,யே வருத்தம் தெரிவித்துள்ளார். பென் சாசே என்பவர், "கிரெப்ஸ் உண்மையில் சிறந்த பணியை செய்தார். மாநிலத் தேர்தல் அதிகாரிகளும் இதைச் சொல்வார்கள். அவர் நீக்கப்பட்டிருக்கக் கூடாது." என்றார்.

No comments:
Post a Comment