
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் நேற்று பகல் 12.50 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விளைவுகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 6.16 மணிக்கு மீண்டும் சியோனி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக இந்த நிலநடுக்கத்தால், ஊர்மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய பிரதேசத்தின் மற்றொரு மாவட்டமான சிந்த்வாராவில் நேற்று மாலை 5.20 மணிக்கு ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment