சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவை விமான
நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: ஆன்லைன்
ரம்மி உட்பட அனைத்து சூதாட்டங்களையும் தடை செய்ய கோரிக்கை
வந்துக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும். இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளோம். ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துவோர் குற்றவாளியாக
கருதப்படுவர். சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7
பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அவர்களை விடுதலை செய்ய திமுக.,வுக்கு அக்கறை இல்லை. 7
பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்.
144 தடை உள்ளதால் வேல் யாத்திரைக்கு சட்டப்படி அனுமதி வழங்க இயலாது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment