
மதுரை தொகுதியில் எம்பியான சு.வெங்கடேசன் கொரோனா தொற்றிலிருந்து இன்று குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். கடந்த அக்டோபர் 20ம் தேதி அவருக்கு காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து கொரோனா அறிகுறி இருப்பதால் பரிசோதனை மேற்கொண்டார்.
இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 23ஆம் தேதி தோப்பூரில் இருக்கும் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பத்து நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,"குணபாடம் சு.வெங்கடேசன் எம் பி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.
குணபாடம்
சு.வெங்கடேசன் எம் பி
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன்.
No comments:
Post a Comment