
திருமணத்திற்கு மாப்பிள்ளை கேட்டுவரும் பெண் வீட்டாரிடம் தவறான தகவல்களை சொல்லி திருமணத்துக்கு தடையாக இருந்த பக்கத்துவீட்டுக்காரரின் கடையை இடித்துள்ளார் கேரள இளைஞர்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் மூக்கை நுழைத்திருக்கிறார்களா, இது எப்போதாவது உங்களுக்கு நடந்திருக்கிறதா? ஆனால் இது ஒரு கேரள இளைஞருக்கு நடந்தபோது, அந்த இளைஞன் அவர்களுடைய கடையை இடிக்க முடிவு செய்தார். இந்த சுவாரஸ்ய சம்பவம் கண்ணூர் மாவட்டத்தின் சேருபுழா பகுதியில் நடந்துள்ளது. ஆல்பின் மேத்யூ என்ற 30 வயது இளைஞர், தனது திருமணத்திற்கு மாப்பிள்ளைகேட்டு வரும் பெண் வீட்டார்களிடம் தவறான தகவல்களை சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்கள் என்று ஜே.சி.பியை பயன்படுத்தி தனது பக்கத்து வீட்டு மளிகைக் கடையை இடித்துள்ளார் மேத்யூ, மேலும் இவர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "இந்த கடை சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபான வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, இந்த பகுதியின் இளைஞர்கள் நாங்கள் இதற்காக வருத்தப்படுகிறோம். இதுகுறித்து கிராம அதிகாரிகள் மற்றும் போலீசில் பலமுறை புகார் செய்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே நான் இந்த கடையை இடிக்கப் போகிறேன்" என்று அவர் கூறுகிறார். முக்கியமாக அந்த நபர் தனது திருமண திட்டங்களை நிறுத்திவிட்டார் என்றும் மேத்யூ கூறுகிறார்.

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த மலையாள அதிரடி திரில்லர் திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒரு காட்சியுடன் இந்த சம்பவத்தை ஒப்பிட்டு இந்த வீடியோ நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகிறது. பின்னர் சட்டவிரோதமாக கடையை இடித்ததற்காக மேத்யூவை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment