கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரில் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு அவரது பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதி புது நகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். அந்த 3 படங்களும் சமூகவலை தளத்தில் வைரலானது. இந்நிலையில் 3 பேரும் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. நிர்வாக காரணங்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment