பேசின்பிரிட்ஜ் அருகே உள்ள அந்த நெரிசலான தெருவில் இரவு 9 மணிக்கு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே சில பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது மூச்சிறைக்க ஓடிவந்த ஒரு ஆண், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அருகே கால்தடுமாறி கீழே விழுகிறார். ‘'அண்ணன் விழுந்துட்டாருடா'' என்று சிறுவர்கள் எதார்த்தாம சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள், ஹெல்மெட் அணிந்தபடியே பின்னால் துரத்தி வந்தவர் கும்பல், கீழே விழுந்த நபரை அரிவாள் , கத்தியால் சரமாரியாக வெட்டித்தள்ளுகிறார்கள்.
இதைப்பார்த்த சிறுவர்கள் தெறித்து ஓடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்த பெண்களும் வீட்டுக்குள் ஓடி, ஒளிந்துகொள்கிறார்கள். வெட்டப்பட்ட அந்த நபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இந்த சம்பவம் கண்டு அவர்களும் அதிர்ந்து போகிறார்கள்.
ஓட ஓட விரட்டி ரவுடி நாய்ரமேஷ் வெட்டிக்கொலை! தெறித்து ஓடிய சிறுவர்கள்! pic.twitter.com/4g3ve2gaAf
- Top Tamil News (@toptamilnews)
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், வெட்டிக்கொல்லப்பட்டவர் சென்னை புளியந்தோப்பில் வசித்த வந்த ரமேஷ் பாபு என்கிற ரவுடி நாய் ரமேஷ் என்பதும், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை செய்துகொண்டிருந்தபோது, விஜி, கார்டன் சரத் உள்ளிட்ட எட்டு கொலையாளிகளும் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த 2016ஆம் புழலில் சிவராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நாய் ரமேஷ். இதனால் பழிக்கு பழியாகத்தான் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நாய் ரமேஷ் கொலை செய்திருக்கிறார்கள் விஜியும், கார்டன் சரத்தும் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருந்தாலும், சிறுவர்களின் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.
- கதிரவன்

No comments:
Post a Comment