Latest News

  

வேலை... வேலை... வேலை ...தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

நிறுவனம்: தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்

பணி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்( ஒப்பந்த கால அடிப்படையிலானது)

காலியிடங்கள்: 16

தகுதி: சமூக பணி,சமூகவியல்,உளவியல்,குற்றவியல்,குழந்தை மேம்பாடு போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம்: சமூக பணி, குழந்தைகள் நலன், சமூக நலன், குழந்தைத் தொழிலாளர் துறையில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2020 தேதியின்படி 26 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 33,250 (ஒப்பந்த சம்பளமாக) வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கல் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
சமூக பாதுகாப்பு ஆணையர் / செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூக பாதுகாப்புத் துறை, எண், 300,
புரசவாக்கம் ஹை ரோடு, கெல்லிஸ், சென்னை -600 010
தொலைபேசி எண் .044-26421358

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2020

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.