
ஜி.எஸ்.டி பற்றாக்குறை மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் மனிதனால் ஏற்பட்ட பேரழிவுக்கு கடவுளை குறைகூற வேண்டாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக தொழில்துறைகள் பாதிப்பை சந்தித்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. இதனை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தவும் இழந்த பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே சமீபத்தில் ஜி.ஏஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் சரிந்துள்ளதோடு (ஜிஎஸ்டி) வசூலையும் பாதித்துள்ளதால் 2021 நிதியாண்டில் பற்றாக்குறை 352.35 லட்சம் கோடியாக உள்ளது தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஜி.எஸ்.டி பற்றாக்குறை கடவுளின் செயல் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்தியா மிகவும் மோசமான பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நிவாரண திட்டங்களை நினைக்கும் போது நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் கடவுளைக் குறை கூறாதீர்கள். உண்மையில் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்தார். தொற்றுநோய் ஒரு இயற்கை பேரழிவு. ஆனால் நீங்கள் ஒரு இயற்கை பேரழிவுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவைக் கூட்டியுள்ளீர்கள் என தெரிவித்தார்.
மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து தெரிவித்த அவர், பாதிப்பை சரிசெய்ய அரசாங்கம் பெருமளவில் கடன் வாங்க வேண்டும் அல்லது பற்றாக்குறையை பணமாக்க வேண்டும் பொதுவான பேச்சுவழக்கில், பற்றாக்குறையின் ஒரு பகுதியை ஈடுகட்ட பணத்தை அச்சிடுங்கள், இது அரசாங்கத்தின் இறையாண்மையின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார். கடன் வாங்குவது, செலவழிப்பது, தேவையை அதிகரிப்பது பணத்தை ஏழைகளின் கைகளில் தருவது ஆகியவை மூலம் நுகர்வு அதிகரிக்கும் நேரம் இது" என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment