
டெல்லி: பேஸ்புக் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி செய்யப்படுவதாக அதன் இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பேஸ்புக் இந்தியா நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியது பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பாஜக, பேஸ்புக், வாட்ஸ் ஆப் இடையேயான தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. செப்டம்பர் 14-ந் தேதி கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் பேஸ்புக் இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் சித்தாந்த நம்பிக்கைகளுடன் செயல்படுகின்றனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க பேஸ்புக்கை பயன்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர் என அதிரடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆன்லைன் செஸ்.. காலிறுதி போட்டியின் போது மின்தடை.. துரிதமாக செயல்பட்ட ஆனந்த்.. சுவாரசிய சம்பவம்!
மேலும் கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது வலதுசாரிகளின் பேஸ்புக் பக்கங்கள் திட்டமிட்டே டெலீட் செய்யப்பட்டன; இது தொடர்பாக பல முறை புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியிருக்கிறார். பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை அவதூறாக விமர்சிப்பதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்; இதனை பேஸ்புக் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பதும் ரவிசங்கர் பிரசாத்தின் புகார்.
அத்துடன் இந்தியாவின் அரசியல் பிரச்சனைகளில் பேஸ்புக் இந்தியா நிறுவன பணியாளர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத், அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
source: oneindia.com
No comments:
Post a Comment