
புதுடில்லி : இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளில் 70 சதவீதம் 5
மாநிலங்களில் இருந்து பதிவாகியதாக மத்திய சுகாதாரதுறை இன்று
தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து
வருகின்றன. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இந்தியாவில் மஹாராஷ்டிரா,
ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5
மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள் பதிவாகுவதாக இன்று மத்திய
சுகாதாரதுறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரதுறை செயலர் ராஜேஷ்
பூஷண் கூறுகையில், மஹாராஷ்டிராவில் இருந்து 37.14 % , தமிழ்நாட்டில்
இருந்து 10.89 %, கர்நாடகாவில் இருந்து 8.98 %, ஆந்திராவில் 6.17 % மற்றும்
உ.பி.,யில் 5.46 % இறப்புகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா, ஆந்திரா,
கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் நாட்டில்
கொரோனா காரணமாக 70 சதவீத இறப்புகளுக்கு காரணமாகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 1,133 கொரோனா இறப்புகளில்
423 இறப்புகள் மகாராஷ்டிராவில் உள்ளன. இந்தியாவில் சிகிச்சையில் உள்ள மொத்த
பாதிப்புகளில் 62 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் பதிவாகின்றன.மொத்தமாக
பதிவான கொரோனா நோய் பாதிப்புகளில், மஹாராஷ்டிராவில் 27 சதவீதமும்,
ஆந்திராவில் 11 சதவீதமும், கர்நாடகாவில் 10.98 சதவீதமும்,
உத்தரபிரதேசத்தில் 7 சதவீதமும், தமிழகத்தில் 6 சதவீதமும் உள்ளன. 14
மாநிலங்கள் / யூ.டி.க்கள் 5,000 க்கும் குறைவான சிகிச்சையில் உள்ள கொரோனா
பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த நோயால் இறப்புகளில் 31.37 சதவீதம் ஆகும்.
இந்தியாவின் மொத்த கொரோனா எண்ணிக்கை இன்று 42,80,423 ஆக உயர்ந்தது.
இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment