ஜூலை.7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து
பரிசோதிக்கப்பட உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதற்கான இடங்களும்
தேர்வு செய்யப்பட்டுள்ளன.
புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக்
தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தான BBV152ஐ மனிதர்களிடத்தில்
பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக
விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தகட்ட
சோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து
கட்டுப்பாட்டுத் தலைமையகமும் இந்தப் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி
ஜூலை.7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட
உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது..மேலும் சோதனை முயற்சி வெற்றி
அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் கிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக இந்தியா அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை
அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக்,
டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத்,ஆர்யா நகர்,
கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
பரிசோதனைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது
தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகப் பெற்று தயார் நிலையில்
இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஐசிஎம்ஆரின் இந்த
முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்
இனிமேல் 'க்ளோ அண்ட் லவ்லி' - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்!
நன்றி : https://m.dailyhunt.in
No comments:
Post a Comment