
புதுடில்லி: இந்தியாவில் தொடர்ந்து 4வது நாளாக 30,000 பேர்
கொரோனாவிலிருந்து, குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் வெறும் 2.28 சதவீதம்
மட்டுமே இறப்பு வீதம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தீவிர பரிசோதனை மூலம், கொரோனா
தொற்றினை ஆரம்ப நிலையில், கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சை
அளிப்பதன் மூலம், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.கொரோனாவால் இறப்பவர்கள் வீதம்
இந்தியாவில் தற்போது 2.28% ஆக உள்ளது. உலகில் கொரோனாவுக்கு இறப்பவர்களின்
வீதம் குறைவாக கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
தொடர்ந்து 4வது நாளாக இன்றும் 30 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் குணமாகி உள்ளனர். இந்தியாவில் தற்போது குணமடையும் வீதம் 64
சதவீதமாக (9,17,567 பேர்) உள்ளது.இறப்பு விகிதம் குறைந்து, அதிகம் பேர்
குணமடைந்து வருவதால், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களை விட, குணமடைவோர்
அதிகமாக உள்ளனர். நாட்டில், தற்போது 4,85,114 பேர் சிகிச்சை பெற்று வரும்
நிலையில், 9,17,568 பேர் குணமாகியுள்ளனர். மருத்துவமனையில்
இருப்பவர்களுக்கும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும்
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment