
தமிழகத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு
அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்
கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு
அறிவித்து. அதற்கு இணங்க, இன்று எந்தவிதத் தளர்வும் தமிழகம் முழுவதும்
முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்து. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள்
அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதேபோல, முழு ஊரடங்கு காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் ஆள் ஆரவமின்றி
வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு
பணியில் ஈடுப்பட்னர்.
தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் உள்ள முக்கிய
சாலைகளான கீழராஜ வீதி, அண்ணா சாலை, ரயிலடி, ஆபிரஹாம் பண்டிதர் சாலை ஆகிய
பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி
இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 150 பேர் மீது காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 45 சோதனைச்
சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள், விசாரணைக்கு பின்பே
அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும்
அடைக்கப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி
காணப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தேநீர்
கடைகள், காய்கறி கடைகள், வணிக வளங்கள், பெட்ரோல் நிலையங்கள் என அனைத்தும்
மூடப்பட்டு, முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment