சிபிஎஸ்இ பள்ளி 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு
கிடையாது என்றும், அகமதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களை அடுத்த
வகுப்பிற்கு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கலாம் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத்
தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை
உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி
வருகிறார்கள்.
கரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில்
இருப்போர் அதிகரித்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன்
தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பள்ளிகளை பொறுத்தவரை 8-ம் வகுப்பு வரை மாணவர்களை
தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 12-ம்
வகுப்பு தேர்வுகள பெருமளவு நிறைவு பெற்றுள்ள நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிபிஎஸ்இ பள்ளி 9 மற்றும்
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு கிடையாது என்றும்,
அகமதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களை அடுத்த வகுப்பிற்கு வெற்றி
பெற்றவர்களாக அறிவிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்
பொக்கிரியால் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment