டெல்லி: மத்தியப்பிரதேச அரசியல்
பரபரப்பிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல்
குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேச மாநில
சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள
230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத்
தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள்
உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும்
விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும்
முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா அதிருப்தி அடைந்தார்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல்
ஆரம்பித்தது.
கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிற கட்சி மற்றும் சுயேச்சை
எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாயினர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை
கவிழ்க்கும் முயற்சில் பாஜ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பா.ஜ
மறுத்தது. எனினும், மாயமான எம்எல்ஏக்கள் சிலர் போபால் திரும்பினர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் முக்கிய பொறுப்பு தராததால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அவரின் ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 6 அமைச்சர்கள் உள்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இதனால், காங்கிரசின் பலம் 93 ஆக குறைந்துள்ளது. 107 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும், மற்ற கட்சி எம்எல்ஏ-க்கள் 2 பேர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அவரின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

No comments:
Post a Comment