
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏப்ரல்
14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஊரடங்கு நாடு முழுவதும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும்
நிலையிலும், தமிழகத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக
உயந்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மாநில
அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
வெளியாகிறது.

மாணவர்களின்
நலன் கருதி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி
அறிவிக்கப்பட உள்ளது என்றும் கொரோனா பரவி வருவதால் அதிலிருந்து மாணவர்களை
காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத்தேர்வு
ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 10ஆம்
தேதிக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால், பொதுத்தேர்வு
திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், மாவட்ட அளவில் தேர்வை
நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
No comments:
Post a Comment