
கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் மாஸ்க், சானிடைஸர் போன்றவற்றுக்கு சென்னையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலகையே
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரச் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனா
பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்களிடையே
பதற்றம் நிலவியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்
இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் மாஸ்க், சானிடைஸருக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அண்மையில்
செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
இந்தியாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்துகொள்ளும் சூழல் இன்னும் ஏற்படவில்லை.
வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான
நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது
என்று கூறியிருந்தார்.ஆனால் தற்போது மக்களிடையே நிலவும் பொதுவான அச்சம்
காரணமாக மாஸ்க், சானிடைஸர் போன்றவற்றின் தேவை அதிகரித்து தற்போது
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் பெரும்பாலான
மருந்தகங்கள் மற்றும் கடைகளில் கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்கள்
கிடைப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
ரூ. 5-க்கு விற்கப்பட்டு வந்த மாஸ்க் தற்போது ரூ. 15 முதல் ரூ. 20 வரை
விற்கப்படுகிறது. தினந்தோறும் கடைகளுக்கு 50 முதல் 100 வரையிலான
எண்ணிக்கையில் மாஸ்க் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தற்போது தேவை
அதிகரித்துள்ளதன் காரணமாக தினந்தோறும் 200 மாஸ்க்குகள் கொண்டுவரப்பட்டு
விற்கப்பட்டாலும், தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment