
5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கோபியில் உள்ள
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட வந்த ஆதி
தமிழர் பேரவை அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
மாவட்டம் கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயன்ற
ஆதி தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து
நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினர்க்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட வந்தவர்கள் பேருந்து நிலையத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆதி தமிழர்
பேரவை அமைப்பு தலைவர் அதியமான் உள்ளிட்ட 200 பேரையும் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.
5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு உடனடியாக ரத்து
செய்யவில்லை எனில் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்படப்போவதாக
போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment