
தில்லி நடந்த வன்முறைச் சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) எதிர்ப்பாளர்களுக்கும்,
ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை பெரும் வன்முறையாக வெடித்தது. இது
இரு மதத்தினருக்கு இடையிலான வன்முறையாக மாறியதால் பெரும் கலவரம் மூண்டது.
இதில் ஏராளமான வாகனங்கள், கடைகள், வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து
அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனா். இதுவரை வன்முறைச்
சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும்
மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேசமயம், வன்முறை வெடித்த பகுதிகளில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
Source : m.dailyhunt.in
No comments:
Post a Comment