
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால்
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ்,
பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
இந்த
கலவரங்களில் 150- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக
உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்
செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "வடகிழக்கு
டெல்லியில் வன்முறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி
வழங்கப்படும். வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10
லட்சம் நிதி வழங்கப்படும்.
காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக
சிகிச்சை பெற அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment