புதுடில்லி: லோக்சபாவில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு
தெரிவித்த சிவசேனா, ராஜ்யசபாவில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு
செய்தனர்.குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நேற்று முன் தினம் லோக்சபாவில்
நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.,11) ராஜ்யசபாவிலும் 125
எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இம்மசோதாவுக்கு
சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் ராஜ்யசபாவில் எதிர்த்தனர்.
இம்மசோதா மீதான விவாதத்திற்குபின் விளக்கமளித்து பேசிய அமித் ஷா,
சிவசேனாவின் நிலைப்பாட்டை குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், 'நேற்று
வரை இம்மசோதாவை ஆதரித்த சிவசேனா, இன்று எதிர்க்கிறது. ஒரு இரவுக்குள் என்ன
நடந்தது என்பதை அவர்கள் மஹாராஷ்டிர மக்களுக்கு சொல்ல வேண்டும்'
என்றார்.இதற்கு விளக்கம் அளித்து, ராஜ்யசபாவில் சிவசேனா எம்.பி., சஞ்சய்
ராவத் பேசுகையில், 'இம்மசோதாவை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும்,
ஆதரிப்பவர்கள் தேசப்பற்று கொண்டவர்கள் என்றும் கூறுவதாக நேற்று வரை
கேள்விப்பட்டேன்.
எங்களது நாட்டுப்பற்று மற்றும் ஹிந்துத்வா கொள்கை
குறித்து எங்களுக்கு எந்த சான்றிதழும் அளிக்க தேவையில்லை என்றார்.
இதனையடுத்து மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன், சினசேனா
கட்சியின் 3 ராஜ்யசபா எம்.பி.,க்களும் வெளிநடப்பு
செய்தனர்.வெளிநடப்புக்குப்பின் பேட்டியளித்த சஞ்சய் ராவத், 'மசோதா குறித்த
சந்தேகங்களுக்கு முறையான பதில் கிடைக்காதபோது, அதனை ஆதரிப்பதோ அல்லது
எதிர்ப்பதோ சரியாக இருக்காது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என
நாங்கள் கூறியதுஇல்லை. அவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக நடந்த சதி அல்லது குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவர்களுக்கு 25 ஆண்டுகள் ஓட்டுரிமை அளிக்கக்கூடாது. இந்திய மக்கள் தொகை மற்றும்இயற்கை வளங்களை வைத்து பார்க்கும்போது, எவ்வளவு மக்களை நாம் ஏற்று கொள்ள வேண்டும். இலங்கையில் வசிக்கும் தமிழ் ஹிந்துக்கள் குறித்து தெளிவுபடுத்தவில்லை. இதுபோல், நிறையவிஷயங்கள் உள்ளன.
எங்கள் கட்சி முடிவால், மஹாராஷ்டிரா கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் வராது. எங்களின் கருத்தை நாங்கள் எடுத்துவைத்துள்ளோம். நாங்கள் சுதந்திரமான அரசியல் கட்சி என்றார். ' என்றார்.

No comments:
Post a Comment