புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து அசாமில்
10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல், 24 மணி நேரம் இணைய சேவை
துண்டிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவதை
தடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது.இதனிடையே, மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று,
திரிபுராவின் கன்ச்சன்பூர் மற்றும் மனு மாவட்டங்களிலும், அசாமின்
போன்கைகோன் மாவட்டத்திலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்
வெளியானது. இதனை ராணுவம் மறுத்துள்ளது. அங்கு, அசாம் ரைபிள் படையினர் தான்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.அசாமின்
திப்ருகார்க் மாவட்டத்தில் அதி விரைவுப்படையினர் தயார் நிலையில் இருக்க,
வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தயாராக உள்ளனர்.
முதல்வர் காத்திருப்பு குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு
தெரிவித்து அசாமில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த
நிலையில், முதல்வர் சர்பானந்தா சோனவால், குவஹாத்தி விமான நிலையத்திற்க
வந்து சேர்ந்தார். ஆனால், முக்கிய இடங்களில், போராட்டம் நடப்பதால், வெளியே
வர வேண்டாம் என முதல்வரின் பாதுகாப்பு குழுவினருக்கு போலீசார் தகவல்
தெரிவித்தனர். இதனால், விமான நிலையத்தில் அவர் நீண்டநேரம் காத்திருக்க
நேர்ந்தது.
பஸ்சுக்கு தீவைப்பு அசாமின் திஸ்புர் மாவட்டத்தில், போராட்டக்காரர்கள் பஸ்சை தீவைத்து எரித்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை துண்டிப்பு போராட்டம் காரணமாக திரிபுராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள மற்றும் குறுஞ்செய்தி சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அசாமில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் மாலை முதல், அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment