சமீப காலமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல்
குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் குழந்தைகள் சம்மந்தமான பாலியல்
படங்கள் பார்ப்பவர்கள், மற்றவர்களுக்கு ஷேர் செய்பவர்கள் குறித்த ஆய்வில்
இந்தியா முதல் இடத்தில் இருப்பதும் அதில் சென்னை முதல் இடத்தில் இருப்பதும்
அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே
இதுகுறித்த விசாரணையில் இறங்கிய குற்றப்பிரிவு போலீசார் சிறாரின் ஆபாச
படங்களை பார்ப்பவர்கள், மற்றவர்களுக்கு பகிர்பவர்களின் பட்டியலை தயார்
செய்தது.
இதன் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில்
சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் மேலும் 40 பேர் கொண்ட
பட்டியல் தயாராகி இருப்பதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்
எனவும் குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் கோவை மாவட்டத்திலும் 30 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment