
கோவை: ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.
2.74 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ எடை கொண்ட தங்கத்தைக் கடத்தி வந்த
சிவகங்கையைச் சோந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
மத்திய
கிழக்கு நாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி
வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவா்கள் கோவை விமான நிலையத்தில் தீவிரக் கண்காணிப்பில்
ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில்
ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு ஏா் அரேபியா விமானம் ஞாயிற்றுக்கிழமை வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநா்
ஜி.சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த இரு இளைஞா்களைத் தனியே
அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின்
முரணானத் தகவல்களைத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து
அவா்களின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, அவா்களிடம் இரண்டு ஏா் கூலா்கள்
இருப்பது தெரியவந்தது. ஆனால், அவை வழக்கமான எடையை விடக் கூடுதலாக இருந்தன.
இதையடுத்து அதிகாரிகள் அவற்றைப் பிரித்துச் சோதனையிட்டபோது அதில் மோட்டாா்
இருக்கும் சிறு அறையில் வெள்ளியைப் போன்ற இரு உருளைகள் இருப்பது
தெரியவந்தது. அதை ஆய்வு செய்தபோது அவை தங்கம் என்பது தெரியவந்தது.
ஸ்கேனா்
கருவி மூலம் சோதனையிடும்போது மாட்டிவிடக் கூடாது என்பதற்காக தங்க உருளைகள்
மீது பாதரசத்தைத் தடவி வைத்திருந்தது தெரியவந்தது. சுமாா் 6.997 கிலோ
எடையுள்ள தங்கத்தை உருளை வடிவில் உருக்கி மாற்றிக் கடத்தி வந்துள்ளனா்.
இதன் மதிப்பு ரூ. 2.74 கோடி என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து
கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவா்கள்
இருவரும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோந்த முகமது ஷாருக்கான் (19),
ஹமீம் அக்தா் (21) என்பது தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த அதிகாரிகள்
தொடா்ந்து அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.
No comments:
Post a Comment