
புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ரகுபர்தாஸ் தமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் குறித்து புது தில்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அதில்,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5
கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் 23ம் தேதி வாக்கு
எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நவம்பர் 30
முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 30ம் தேதி 13 தொகுதிகளுக்கு
முதல் கட்ட தேர்தல் நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
No comments:
Post a Comment