
இந்தி மொழி பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதற்கு, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் இந்தி கற்பது தவறில்லை என்கிறார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் சென்று, நம்முடைய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்கு இணைப்பு மொழியாக இந்தி இருக்கும். அப்படிப்பட்ட மொழியை அவர்கள் கற்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? அதே நேரம், வட இந்திய இளைஞர்கள், மூன்றாவது மொழியாக தமிழைக் கற்கலாம் என வலியுறுத்தலாம். அப்படி அவர்கள் தமிழையும், நாம் இந்தியையும் கற்கும்போது, அது ஒரு கலாசார பரிமாற்றமாகத்தான் இருக்கும். இந்தி மொழிக்கு எதிராக போராடுபவர்கள் குழந்தைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா? புதிய மொழியால் தாய் மொழியின் மீதான பற்று விலகிவிடுமா? தமிழ் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம். மது பிள்ளைகளுக்குத் தேவை சிறந்த கல்வி, முழுமையான பாடத்திட்டம், நம்பிக்கை போன்றவை தான். இந்தியை எதிர்ப்பதை விட்டு விட்டு, ஆரோக்கியமாக சிந்திக்கப் பழக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment