
அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வின் சட்டமன்ற உறுப்பினரான பழனிவேல் தியாகராஜன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். மதுரை மாவட்ட நெடுஞ்சாலை துறை அலுவலக கோட்டப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் கட்சி சார்ந்த வண்ணம் பூசப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்
அவரது கடிதத்தில்… மதுரையின் பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வைகை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் தங்களது துறையின் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வண்ணம் பூசுகின்ற பணி நடைபெற்று வருகிறது
முழுவதுமாக மக்கள் வரிப்பணத்திலிருந்து நடைபெறும் இப்பணியில் ஒரு அரசியல் கட்சியின் சாயலில் வண்ணம் பூசப்படுவது ஏற்புடையது அல்ல! எனவே அரசியல் சார்பு இல்லாமல் பணிகள் நடைபெற தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் மாநில சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு உறுப்பினர் என்ற முறையிலும் தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?
இந்நிலையில், மதுரை மேம்பாலத்தில் அடிக்கப் பட்டு வரும் வண்ணம் எந்த நிறம் என்று அவர் குறிப்பிடவில்லை என்பதால், சட்டமன்ற உறுப்பினருக்கு கலர் ப்ளைண்ட்னஸ் எனப்படும் நிறக்குருடு ஏற்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில், கலைஞர் டிவி என்று இலவசம் கொடுக்கும் போதும், கறுப்பு சிகப்பு வண்ணம் போட்டும், பொங்கல் இனாமும் பொருள்களும் கொடுக்கும் போதும் அது மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப் படுவது என்பதும், அரசியல் கட்சி சார்பு என்பதும் சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் போனதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றக் கட்டடங்கள், அண்ணா பல்கலை போன்ற பல்கலைக் கட்டடங்களில் என்ன வண்ணம் பூசப் பட்டுள்ளது என்றும், அது அரசியல் கட்சி சார்பு என்பது சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் போனதற்குக் காரணம் அதுதானோ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசுப் பேருந்துகளில் என்ன வண்ணம் பூசப் பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பும் சமூக வலைத்தளவாசிகள், அதனால்தான் மக்கள் திமுக.,வினரை அடிமை, டயர்நக்கி என்று அழைக்கிறார்களோ என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
காவி கலர் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது, மேல இருக்க பச்சை கலர் கண்ணுக்கு தெரியல……. நல்ல கண் மருத்துவரை பார்க்கவும்
சார் ஒருவர் அங்கே தோசையில் சாதி பார்க்கிறார் நீங்கள் வன்னத்தில் மதத்தை பாக்குறீங்க . எப்ப சார் திருந்த போறீங்க . # திருட்டுதிராவிடம் .
Subramanian Nambi @king_nambi
பல ஊர்களில் மக்கள் பாலத்துக்கு கீழே மணலைக் காணோம், நிலத்தடி நீர்மட்டமும் கண்ணுக்கெட்டா தூரத்துக்கு போய்டுருக்குன்னு கவலையா இருக்காங்க! ஒரு சில இடங்களில் போராட்டமும் செய்யறாங்க. ஆனா நமக்கு இது தான் முக்கியம், இந்த வண்ணத்தை பாத்துட்டு தான் மேகமும் திரளல, மழையும் பெய்யல!
வணங்காமுடி @
கலர்ல கூட பிதியாய்போய் கெடக்கானுங்க திராவிட அடிமைங்க..
No comments:
Post a Comment