மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் தங்கி உள்ள தமிழ்செல்வன் தங்கியுள்ள
அறையில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில்
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு
சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில்
ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய
கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளின் தலைவர்கள் 4
தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அமமுக
கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம்
தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கதமிழசெல்வன் தங்கி
உள்ளார். இந்நிலையில் பரிசு பொருட்களை விநியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து
தங்க தமிழ்செல்வன் தங்கியுள்ள விடுதியின் அறையில் கடந்த ஒரு மணி
நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏதுவும்
கைப்பற்றினார்களா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment