
சென்னை: மே 19 அன்று நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக
சார்பில், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில்
செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன்,
ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகின்றனர் என்று அக்கட்சியின்
தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
4
தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆகும். 30 ஆம்
தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், மே 2 ஆம் தேதி மாலை 3
மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அன்றைய தினமே வேட்பாளர்
இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
இதனைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி
வாக்குப்பதிவும், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், 23 ஆம்
தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதிமுக சார்பில் 4
தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது ஓரிரு நாளில்
அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,
4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்து,
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில்,
''சூலுார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், த.மோ.
அன்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல,
அரவக்குறிச்சி தொகுதிக்கு க.பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி,
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பெரியசாமி மற்றும் மணிமாறன், ஒட்டப்பிடாரம்
தொகுதிக்கு கே.என்.நேரு, கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,''
மேலும், வருகிற
மே 19 அன்று நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் (தனி),
அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்,
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திமுக தலைமைக் கழகத்துடன்
தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை திமுக
சார்பில் கவனித்திட அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment