
சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு
செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி
பேட்டி அளித்துள்ளார். இவர் சசிகலா குறித்தும் தனது பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக
நடந்த உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல்
கட்சியின் எதிர்காலம் குறித்தும் இதில் பல விஷயங்கள் பேசப்பட்டது.
இதன்பின்
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எல்லா உறுப்பினர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். தினகரன் வழிகாட்டும் திசையில் கட்சி பயணிக்கும்.
அமமுகவில் தலைவர் என்ற பதவியை உருவாக்கவும் நிர்வாகிகள் கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டது. அதனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த இந்த
அவர்தான் தலைவி. அதிமுகவுக்கு உரிமை கோரும் சட்டப் போராட்டங்கள் தொடரும்.
அதனால்
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின் அதிமுக பொதுச்செயலர் பதவி
குறித்து வழக்கு போடுவோம். அவர் வந்தபின் முக்கியமான மாற்றங்கள் நடக்கும்.
அதை சசிகலா கவனித்துக் கொள்வார் என்று, அமமுக செய்தி தொடர்பாளர்
சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment