
ஆட்சியை காப்பாற்றுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக,
அதிமுக எம்பி அன்வர் ராஜா சூசகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முத்தலாக் சட்டத்தை லோக்சபாவில் கடுமையாக எதிர்த்து பேசியவர் ராமநாதபுரம்
தொகுதியின், அதிமுக எம்.பி. அன்வர்ராஜா. இறைவனுக்கு எதிரான இந்த
சட்டத்திற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என பாஜகவிற்கு சாபம் கொடுத்தவர்.
ஆனால், இப்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது.
இதனால், அன்வர் ராஜா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
அன்வர் ராஜா பேச்சு
அதேநேரம், பாஜக-அதிமுக கூட்டணியை அன்வர்ராஜா நியாயப்படுத்தி பேச
ஆரம்பித்துள்ளார். அதிமுகவினருடனான அவரது பேச்சு ஒன்று அதை நிரூபிப்பதாக
உள்ளது. நிர்வாகிகள் மத்தியில் அன்வர் ராஜா உரையாற்றியபோது, இவ்வாறு
நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
லாப நஷ்ட கணக்கு
அன்வர் ராஜா பேச்சிலிருந்து.. "தேர்தல் காலத்தில் வைக்கக்கூடிய, தேர்தல்
கூட்டணி என்பது தேர்தல் நேர லாப-நஷ்ட கணக்கு. லோக்சபாவிற்குள், அல்லது
சட்டசபைக்குள் அதிக எண்ணிக்கையில் நமது உறுப்பினர்களை போக வைப்பதற்காக,
போடும் லாப நஷ்ட கணக்கு அது.
அரசை காப்பாற்ற வேண்டும்
இந்த அரசை 'அம்மா' நமக்கு அளித்தார். அதைக் காப்பாற்ற வேண்டும். மக்களை
காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

கொள்கை அதுதான்
அதிமுக தனது கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொள்கையில்
மாற்றமின்றி தேர்தல் கால உடன்பாடுதான் இது. எனவே இதை வைத்து நமது கொள்கைகளை
சந்தேகப்பட வேண்டாம். இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment