ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் பருவ மழை
பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக
குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில்
மிதக்கின்றன.
தொடர்ந்து மழை பெய்வதால்
குவின்ஸ் லேன்டில் உள்ள அணை திறந்து விடப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய
நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. அணைகளில்
இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், சாலைகளிலும் உலாவருகின்றன. இதனால்
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும்,
மின்சார வெட்டும் நிலவுகிறது. எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில்
இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment