கடந்த செப்டம்பர் 2018-ல் ஆதார் எண்ணை, வருமான வரித்துறை ஒவ்வொரு தனி
நபருக்குக் கொடுக்கும் பான் அட்டையோடு இணைக்க வேண்டும் எனச் சொல்லி
இருக்கிறது.
அதோடு
வருமான வரிச் சட்டம் 139 AA (2)-ன் படி ஒரு நபருக்கு ஆதார் எண் இருக்கிறது
என்றால் அவர் கட்டாயமாக தன் பான் எண்ணை ஆதார் எண்களோடு இணைத்து வருமான
வரித்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதற்காகத் தான் வருமான வரிப் படிவத்தில் கூட ஆதார் எண் அல்லது ஆதாருக்கு பதிவு செய்த எண் என அனைத்து விவரங்களையும் கேட்கிறார்களாம்.
இயக்குநர்
மத்திய
நேரடி வரி வாரியத்தின் தலைவர் சுஹில் சந்திரா "இந்தியாவில் 125 கோடி பேர்
வாழ்கிறார்கள். அவர்களில் சுமார் 42 கோடி பேருக்கு பான் அட்டைகளைக்
கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை 23 கோடி பேர் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை
வருமான வரித்துறையினரின் பான் அட்டையோடு இணைத்திருக்கிறார்கள்.
கடைசி தேதி
வரும்
மார்ச் 31, 2019 தான் பான் அட்டையை, ஆதார் எண்ணோடு இணைப்பதற்கான கடைசி
தேதி. எனவே இதுவரை பான் அட்டையை, ஆதாரோடு இணைக்காதவர்கள் விரைவாக இணைக்கச்
சொல்லி வலியுறுத்துகிறார். அதைத் தாண்டினால் வருமான வரித்துறை
அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து தங்கள் ஆதாரை இணைப்பது போல்
ஆகிவிடும். எனவே மார்ச் மாதத்துக்குள் தங்கள் எண்களை இணைக்கச் சொல்லி
வலியுறுத்துகிறார் இயக்குநர் சுஷில் சந்திரா.
இவ்வளவு பேர் தானா..?
கடந்த
2017 - 18 நிதி ஆண்டில் 6.31 கோடி பேர் வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முந்தைய 2016 - 17 நிதி ஆண்டுக்கு 5.44 கோடி பேர் மட்டுமே வரி
தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சி நிச்சயம் தேவை தான். அதுவும்
இந்தியா போன்ற 125 கோடி பேர் வாழும் நாட்டில் வெறும் 6.3 கோடி பேர் மட்டுமே
வரி தாக்கல் செய்வதே வருத்தமானதாம்.
ஏன்..?
ஒரு
தனி நபரின் பெயரில் ஒரு பான் அட்டைக்குக் மேல் கூட வழங்கப்பட்டிருக்கிறது.
அவைகளை எல்லாம் கண்டு பிடித்து ரத்து செய்ய, உண்மையாகவே வரி தாக்கல்
செய்யாமல் ஏமாற்றி வருபவர்களைக் கண்டு பிடிக்க, வரி தாக்கல் செய்தும் மொத்த
சொத்து விவரங்களை கணக்கில் காட்டாமல் இருப்பவர்களைக் கண்டு பிடிக்க இந்த
இணைப்புகள் உதவியாக இருக்கும். அப்படி ஒருவேளை நாளை இணைக்கவில்லை என்றல்
வருமான வரிஒயே தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்யவிலலை
என்றால் வங்கிக் கடன்கள் போன்ற நிதி சமாச்சாரங்களில் சிக்கல் ஏற்படும், வரி
தாக்கல் செய்யாததற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் வேறு
விதிக்கப்படும் எனக் கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment